அமைச்சரவை கூட்டத்தில் றிசாத் ,ஹக்கீம் மோதல் – ஜனாதிபதியினால் தடுத்து நிறுத்தம்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியூதீன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தில் அமளி ஏற்பட்டதாக அமைச்சரவைத்தகவல்கள் தெரிகின்றன.
கேள்வி மனு ஊழல், தரகு பணம் பெறுதல், ஊழல், மோசடி சம்பந்தமாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி கடும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு அமைச்சர் நீ திருடன் எனக் கூற மற்றைய அமைச்சர் நீ பச்சை கள்ளன் என திட்டியுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜனாதிபதி நிறுத்துமாறு சில முறை கூறிய பின்னரே இருவரும் தமக்கிடையிலான வாக்குவாதத்தை நிறுத்தியுள்ளனர் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.