ஓரிரு தினங்களில் புதிய கட்சி, 10 லட்சம் பேர் முன்னிலையில் அறிமுகம்-பசில் தகவல்
புதிய கட்சி நிச்சயமாக இன்னும் ஓரிரு தினங்களில் பிரகடனப்படுத்தப்படும். அறிமுகம் செய்யப்படும் தினத்தில் நாடு முழுவதும் 12 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள 10 லட்சம் பேரை கூட்ட ஏற்பாடு செய்துள்ளோம் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
முச்சக்கர வண்டியினுள்ளேயோ, அறையொன்றுக்குள்ளேயோ இந்த கட்சியை நாம் ஆரம்பிக்க மாட்டோம். 10 லட்சம் பேர் முன்னிலையில் இந்த கட்சியை அறிமுகம் செய்வோம் எனவும் அவர் நேற்று ஊடகங்களிடம் கூறினார்.