மென்வலு சுமந்திரன் அவர்களே! 30 வருட போராட்டத்தில் தமிழர்கள் கண்டதை தெரிந்துகொள்ளுங்கள்
வருடங்கள் போராடி என்ன கண்டீர்கள் ??? கூட்டமைப்பின் பேச்சாளரும் மென்வலு கட்டை சட்டவாளர், சாணக்கியர் என்டு அரச எடுபிடிகளால் அழைப்படுபவருமான சுமந்திரன் அவர்கள் கேள்வி!
திரு. சுமந்திரன் அவர்களே
30 வருட போராட்டத்தில் நாம்…
சலுகைகளுக்காக விலைபோக ஒப்பற்ற தலைவனையும் மாவீரர்களையும் கண்டோம்
போன இடமெல்லாம் அடிவாங்கிய தமிழினம் திருப்பி அடிக்க கண்டோம்
நாய்களை போல் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட கண்டோம்
அப்போது அழிந்து கொண்டிருந்த எம் இனமும் மொழியும் நிமிர்ந்திட கண்டோம்
ஓயாத அலைகளையும் வல்லரசுகள் வியக்கும் இராணுவ வெற்றிகளையும் கண்டோம்
தனிதேசத்திற்கு இணையான நிழல் தேசம் உருவாகி சிறப்பான நிர்வாகம் நடைபெறக்கூடிய கண்டோம்
முப்படைகள் கண்டோம்
தனிச்சிறப்பான காவல்துறையை கண்டோம்
பாலின சமத்துவம் கண்டோம்
சாதிகள் ஒழிந்ததை கண்டோம்
சமத்துவ தேசம் கண்டோம்
ஆம் ஒப்பற்ற ஒரு போராட்டம் கதிர்காமர்களாலும் கருணாக்களாலும் அழியக் கண்டோம்
வல்லரசுகளை எதிர்த்து விடுதலை வேண்டிப்போன வேங்கைகள் அழியக்கண்டோம்
அக்னிப்குஞ்சுகளோடு அவை காத்து வந்த நீர் பறவைகளும் அழியக் கண்டோம்
ஆம் 1956 ஆல் ஆரம்பிக்கப்பட்ட இன, மொழி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அந்த 30 வருடப்போராட்டம் இல்லாது விடின் இன்றும் தமிழர் என்று ஒரு இனமே இருந்திருக்காது,,,
நீங்களும் இவ்வாறு கேட்டு இருக்கவும் மாட்டீர்கள்,,,,புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு கரையோரம் வாழ்ந்த தமிழர்களை போல் இன்று மொழி மாறி இனம் மாறி மதம் மாறி யாருக்காவது மென்வலு என்டு பூ சுத்திக் கொண்டு இருப்பீர்கள்.
நன்றி – பிரசாந்த்