போராட்டத்தை கைவிட்டனர் மாணவர்கள்..!! நாளை கொழும்பில் ஜனாதிபதியுடன் பேச்சு
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொண்டு வந்த எதிர்ப்புப் போராட்டம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான கலந்துரை யாடலின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை விஜயம் செய்த மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவினருடன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இக் கலந்துரையாடலையடுத்து தமது போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இதேவேளை இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதியுடன் நாளை பகல் கொழும்பில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் ஒன்றியம் ஆகியவற்றுடனான சந்திப்பொன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் காலை யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு நீதி கோரி சக மாணவர்கள் பல்கலைகழக வாயில் கதவினை மூடி நிர்வாக செயற்பாட்டை முடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.