Breaking News

வட மாகாணசபை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் : ஐங்கரநேசன்



வட மாகாணசபை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில், பல்வேறு விமர்சனங்கள் எழுவதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

எனினும் தமக்கு வாக்களித்த மக்களுக்கு சேவைசெய்ய முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு சபையினால் 94 ஆவது ஆண்டு சர்வதேச கூட்டுறவு தின விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் வட மாகாண கூட்டுறவு அமைச்சர் திரு பொ.ஜங்கரநேசன் வட மாகாணசபை உறுப்பினர்களானக.சிவநேசன், து.ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே வட மாகாண விவசாய அமைச்சர்பொன்னுத்துரை ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார்.

மாகாணசபையினால் தமது தேவைகளை நிறைவேற்றப்படும் எண்ணி மக்கள் வாக்களித்ததாக குறிப்பிட்ட விவசாய அமைச்சர், மாகாணசபையை பொறுப்பேற்றுக்கொண்ட தமக்கு குறிப்பிட்ட எல்லைக்குமேல் மக்களுக்கு எதையும் செய்யமுடியாது என தெரியும் எனவும் கூறினார்.