வடக்கில் இராணுவ திட்டங்களை வலுப்படுத்துகிறதா கூட்டமைப்பு(படங்கள்)
இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவத்தினால் அமைக்கப்பட்ட வீ்டுகள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த வீடமைப்பு திட்டத்திற்கான நிதி மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து வழங்கப்பட்டு எந்த வித கேள்விகோரல்களோ அல்லது வழமையான திட்ட அமுலாக்கல் செயற்பாடுகளோ செய்யப்படாமல் இராணுவத்தினரிடம் நிதி கையளிக்கப்பட்டு முற்றுமுழுதாக அவர்களாலேயே வீடுகள் கட்டப்பட்டு இன்று மைத்திரி மற்றும் த.தே.கூட்டமைப்பின் அனுசரணையோடு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இராணுவத்தினர் மக்களின் மீள்குடியேற்ற வேலைகளிலும் அபிவிருத்தி திட்டங்களிலும் தலைமையேற்று செயற்படுவதினை த.தே.கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. முன்னர் மகிந்த ராஜபக்சேவை அழைத்துவந்து டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு படம் காட்டுவதற்கும் இப்போது மைத்திரியை அழைத்து இராணுவத்தின் திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் என்ன வித்தியாசம் என்பதை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செயற்படும் கூட்டமைப்பின் தலைமைகள் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இது நல்லாட்சியா அல்லது இராணுவ ஆட்சியா என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இதுபற்றி எந்த ஊடகங்களும் கேள்வி எழுப்பவில்லை என்றும் அங்கு கலந்துகொண்டிருந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, தமிழ் தேசியக் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்