மைத்திரி கூறியது பொய்
தாமரைத் தடாகம் (நெலும் பொகுன) குறித்து ஜனாதிபதி கூறியது முற்றிலும் பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தாமரைத் தடாகம் (நெலும் பொகுன) கலையரங்கை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவே அடிக்கல் நாட்டியதாகவும், அந்த நினைவுப் பலகையை அகற்றிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ புதிய நினைவுப் பலகையை வைத்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அண்மையில் பொலன்னறுவையில் வைத்து இந்த தகவலை ஜனாதிபதி கூறியுள்ளார்”, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த கருத்தை மஹிந்த மறுத்துள்ளார். சந்திரிக்காவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நினைவுப் பலகை அகற்றப்படவில்லை எனவும், அதற்கு அருகில் வேறு ஒரு நினைவுப் பலகையை நிர்மாணித்ததாகவும் மஹிந்தவின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
தாமரைத் தடாகத்திற்கு செல்லும் எவருக்கும் குறித்த இரு நினைவுப் பலகைகளையும் பார்வையிட முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.