Breaking News

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மிகவும் ஆபத்தானது

பயங்கரவாத தடை சட்டத்திற்குப் பதிலாக  கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திலும் எந்தவித மாற்றங்களும் இருக்காது என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் தலைமையாலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


நாட்டில் நடைமுறையிலுள்ள மிகவும் கொடுரமான சட்டமாக கருதப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அனைத்து உள்ளடக்கங்களையும் கொண்டு புதிய பெயரில் வரவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் முஸ்லிம் மக்களை ஒடுக்குவதற்காக முன்வைக்கப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத சட்டத்திற்கு பதிலாக ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்வைக்க உத்தேசித்துள்ள பயங்கரவாத எதிரப்பு சட்டத்தில் பெயர் மாற்றத்தை தவிர வேறு எந்தவித மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஏற்கவே நாடாளுமன்றிலும் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்த நிலையிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எஸ்.சுபைர்தீன் இந்த சந்தேகங்களை முன்வைத்திருக்கின்றார்.

உத்தேச  பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது முஸ்லீம்களை இலக்காக வைத்து இயற்றப்படுகின்றதா? என்ற சந்தேகம் முஸ்லீம் சமூகத்திற்க்கு மத்தியில் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர்இ இதனால் அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது குறித்து உன்னிப்பாக செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.