Breaking News

இலங்கையை வந்தடைந்தார் றீட்டா ஐசக் – மார்ச் அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்



ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் உள்ளிட்ட குழுவினர் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த குழுவினர் எதிர்வரும் 20ம் திகதி வரை இங்கு தங்கியிருந்து, சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும், இதன்பொருட்டு இவர் கொழும்புக்கு மேலதிகமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கும் செல்லவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் றீட்டா ஐசக் அரசாங்க அதிகாரிகள், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ள அதேவேளை, எதிர்வரும் 20ம் திகதி கொழும்பு ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பிலும் இவர் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன் றீட்டா ஐசக் உள்ளிட்ட குழுவின் இலங்கைக்கான விஜயம் குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐநா மனித உரிமைகள் அமர்வில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது