இந்திய வைத்தியசாலையில் தீ – சுமார் 23 பேர் பலி
ஒடிசா – புபனேஸ்வர் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சைப் பெற்றுவந்த பல நோயாளர்கள் தற்போது வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தீ தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மின்சார கசிவே இந்த தீக்கான காரணமாக இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.