Breaking News

உங்களுக்காய்..!! ஒரு நண்பியின் அழுகுரல்..!



ஒரு கெட்ட கனவு கண்டு கொண்டிருந்தேன்
பக்கத்து அறையில் நண்பி ஓலமிடுகிறாள்....

பதறிப் போய் விழித்துக் கொண்டு கதைவை பலம் கொண்டு தட்டுகிறேன்
அடியேய் திற டி என்னடி
சுலக்‌ஷனும் கஜனும் சுலக்‌ஷனும் கஜனுன்
இருக்காங்க தானே என்பது தான் என் கேள்வியான பதில்
இருந்து விட வேண்டும் மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாது என்பது என் விருப்பம்
இல்லடி செத்திட்டாண்டி நாய் செத்திட்டாண்டி 
அந்தப் பொய்க்கார நாய் செத்திட்டாண்டி
அவள் பேசுவது மூளைக்கு கேட்டுவிட்டது மனசுக்கு தகவல் இன்னும் கிடைக்கவில்லை

ஓ வென் ஆரம்பிக்கிறேன் 
அவ்வளவு தான் அதன் பின்னர் அழவே இல்லை ..என் மனசுக்குத் தான் அவன் இருக்கிறானே
அவனுக்கான தன் கடைசிக் கையசைப்புப் பற்றி இறுதி ஐக்கிய உணவு பற்றி எல்லாரோடையும் கதைக்கோனுமடி யாரோடையும் கோவிக்கக் கூடாது என்ற வார்த்தைகளை ஏன் சொன்னாய் ஏன் சொன்னாய் மாறிலடித்து அழும் அவளைப் பார்க்க முடியவில்லை
எத்தனை முறை உன்னையும் எல்லாரையும் போல நினைத்து உன்னுடனான நட்பைத் தவிர்த்திருக்கிறேன் சுலக்‌ஷன்

நீயாய் வழிய வந்து பேசினால் சிரித்துக் கடக்கத்தானே டா முனைந்திருக்கிறேன்
கடைசியாக என் போட்டிக்கு வாழ்த்துத் தெரிவித்து கைகுலுக்கினாயே அப்போது கூட நான் எவ்வளவு தயங்கினேன்.
நீ நல்ல நண்பன் என்பதை நேற்றுத்தான் புரிந்து கொண்டேன் 
ஏன் இன்றைக்கு எனக்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விட்டாய்
நீ ஒரு மிகப் பெரிய பொய்க்காரன்

என் போட்டிக்கு ஆதரவு தருவதாய்ச் சொன்னாய் நீ வெற்றி பெற்றால் பெரிதாய்க் கொண்டாடுவோம் டி என்றாய்
நிதுவுக்கு எப்போதும் உடனிருப்பேன் என்றிருக்கிறாய்
தயானாத்தின் பிறந்த நாள் விருந்திலே எல்லாரையும் இணைத்து விடலாம் என்று வாக்குக் கொடுத்திருக்கிறாய்
இப்படி எதையுமே நிறைவேற்றத் திராணி இல்லாமல் இப்படி நிற்கதியாய் எங்களை நிக்க வைத்த நீ மிகப் பெரிய ஏமாற்றுக்காரன்

விபத்தில் முழு உயிரும் போயிருக்காதேடா கொஞ்சமாய் குறையாய்க் கூட உன் உயிர் துடிக்கவில்லையா
உன் பிணத்தைப் பார்க்க எல்லாரும் ஆஸ்பத்திரிக்குப் போவதாகச் சொல்கிறார்கள்
நாங்கள் உன்னைப் பார்க்கத்தான் வருகிறோம்
நாங்கள் வந்தால் நீ எழுந்து கொள்வாய்
நிது அழுகிறாள் முழுவதுமாய் மூடிக் கட்ட வேண்டாம் என்று சொல் ப்ரியா அந்தக் கால்களையாவது கட்டிக் கொண்டு அழவேண்டும்

விபத்து பற்றிய புகைப்படத்தை ஜோ கண்பித்தாள் .
அங்கே சுவரில் கிடந்த உன் ரத்தத்தை நான் அவளுக்கு காண்பித்தேன் ..சுலக்‌ஷண்ட ரத்தம் டி

திரும்ப வாடா நேற்று யுனிவசிற்றி பிரசிடெண்ட் எலக்‌ஷனில் நிற்கப் போவதாகச் சொன்னாயாமே இப்போது பார் ஒட்டு மொத்த உனிவசிற்றியும் உனக்காக வந்து நிற்கிறோம் ஒரு ஓட்டுக் கூடத் தவறாது டா மீள வா சுலக்‌ஷன்

நீ அழுதா பாக்க சகிக்காதுன்னு சொல்லுவியே அந்த பிரியங்கா இப்போ அழுதிட்டே இருக்காடா எழும்பி வந்து என்னெண்டு கேளுடா

எல்லாப் பாடத்திலும் a எடுக்கப் போவதாய்ச் சொன்னான் டி அம்சா அழுது வைக்கிறாள்
எவ்வளவு பெரிய குற்றவாளிகளாய் எங்களை நிறுத்தி விட்டாய் நாங்கள் ஏன் உன்னை வழிப்படுத்தவில்லை
உன்னோடு பகிர்ந்து கொண்ட சோற்றுருண்டைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கி நிற்கிறது
திரும்ப வா சுலக்‌ஷன் இந்தச் செய்தி உண்மையில்லை என்று அழும் எங்களை விசாராடி உனக்கென்று கேள் வா சுலக்‌ஷன்

மரணம் எத்தனை கொடியது என்று மனதுக்கு நெருக்கமானவர்கள் மரணித்துத்தான் புரிய வைக்க வேண்டுமா
உன்னைப் பார்க்கத்தான் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருக்கிறோம் இருப்பாய் தானே நண்பா
இந்தச் செய்தி கூட காலையில் கண்ட அந்தக் கெட்ட கனவு தான் என்று சொல்லேன் பிளீஸ்.

Priya Vincent Peris
.



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்