ஏமனில் ஹைதி கிளர்ச்சியாளர்கள் மீது முதன் முறையாக அமெரிக்கா வான்வெளி தாக்குதல்
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹைதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏமன் அரசு படைகளுக்கு எதிர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
இந்த விவகாரத்தில் சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமன் அரசுக்கு ஆதரவாக ஹைதி கிளர்ச்சியாளர்களின் பகுதிகள் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஏமனில் ஹைதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது முதன் முறையாக அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் பெண்டகன் செய்தி குறிப்புகள் இந்த தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளது.
முன்னதாக கடந்த வாரம் அமெரிக்க கப்பல்கள் மீது ஹைதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
செங்கடலை ஒட்டியுள்ள ஹைதி கிளர்ச்சியாளர்களின் பகுதிகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.