த.தே.கூ - ரீட்டா நாளை சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் விசேட அறிக்கையாளர் ரீட்டா இசாக் நாடியா நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கையில் தமிழ்மக்கள் நீண்ட காலமாக பல்வேறு இன, மத ரீதியிலான இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில் சம அந்தஸ்து அளிக்கப்பட வேண்டிய தன் அவசியம் தொடர்பாக இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 10 நாள் விஜயம் மேற் கொண்டு இலங்கை வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் விஷேட தூதுவர் வடக்குமாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோரை சந்தி த்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.