Breaking News

மஹிந்தவை மக்களே அடித்துக் கொன்றிருப்பார்கள்..!!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சியில் நீடித்திருந்தால், மக்கள் அவரை அடித்தே கொன்றிருப்பார்கள் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்குப் பயந்தும் ஜெனீவா பிரச்சினைக்கு பயந்துமே ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் மஹிந்த தேர்தலை நடத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதும் மஹிந்த உள்ளிட்டோர் இனவாதம் பேசிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட விஜயதாச ராஜபக்ஷ, தமது இனத்தின் மீது பற்றுள்ள எவரும் இனவாதம் பேசமாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி, இனவாதம் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது இனவாத செயற்பாடுகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் இடங்கொடுக்காதென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.