Breaking News

யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரத்திற்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமல்ராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று ஊடக சுதந்திரத்திற்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு யாழ்.ஊடக மையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பேரூந்து மத்திய நிலையத்தின் முன்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதமின்றிய விசாரணை, ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல், தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.