இன்று இந்தியா செல்கிறார் ஜனாதிபதி
கோவாவில் இன்று ஆரம்பமாகும்,பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மற்றும் வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பு மாநாடுகளில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தியா செல்லவுள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டிற்கு இம்முறை தலைமை தாங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
அத்துடன், வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா, தாய்லாந்து, பங்காளதேஸ், மியான்மார், நோபாளம் ஆகிய நாடுகளுடன் சிறிலங்காவும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாடுகளில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபர், பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.
இந்த மாநாடுகளில் பங்கேற்க இந்தியா வரும் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு அரச விருந்துபசாரம் அளிப்பார்.