Breaking News

யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இலவச பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை



யுத்தத்தினால் முகத்தில் காயப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவினர், இதனால் அவ்வாறானவர்களுக்கு இலவசமாக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவி த்துள்ளது.

இந்த சத்திர சிகிச்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவின் மாவட்ட ஆளுநர் வைத்திய கலாநிதி வைத்திலிங்கம் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

சர்வதேச லயன்ஸ் கழகமானது தனது மனித நேயப்பணியில் நூறு ஆண்டுகளை பூர்த்தி செய்வதை முன்னிட்டு இவ்வாறான சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முகத்தில் காயம் ஏற்பட்ட பலர் சமூகத்திலிருந்து மறைந்து வாழ்வதாகவும் பல பெண்கள் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் லயன்ஸ் கழக உறுப்பினர் வைத்தியர் அமுதா கோபாலன் தெரிவித்தார்.

இதனால் பிளார்ரிக் சத்திர சிகிச்சையை பெற்றுக்கொள்ள விரும்புபவர்களை 5 ஆம் திகதிக்கு முன்னர் 0718186185 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யு மாறும் அவர் கேட்டுக்கொண்டார்.