Breaking News

நல்லாட்சிக்கு எதிராக களத்தில் சந்திரிக்கா – மஹிந்தவின் வழியில் வீதியில் இறங்க தயார்!



குறைவான கல்வியறிவை பெற்றுக் கொண்டு, குறைவான சேவை செய்து அதிக இலாபங்களை சம்பாதித்துக் கொண்டு வியாபாரம் செய்து கொள்ள சரியான இடம் பாராளுமன்றமே என நினைப்பவர்களே தற்போது அதிகளவில் பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று பரிசளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசியல் என்பதனை வியாபாரமாக நினைக்கும் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானவர்களே தற்போது பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள்.

முறைகேடான அமைச்சர்களும் மாகாணசபை உறுப்பினர்களுமே தற்போது அதிகமாக இருக்கின்றார்கள். எனக்கு இது கசத்துபோய் விட்டது.

எனது ஆட்சியில் 3 தடவைகள் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது அதற்கு பின்னர் இன்றளவும் சம்பள உயர்வு என்பது வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் நாட்டில் கல்வியை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். முறையான அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெறுவதோடு அரச ஊழியர்களுக்கு தகுந்த சேவைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். எதிர்வரும் காலத்தில் அது நிறைவேற்றப்படும் என நம்புகின்றேன்.

அவ்வாறு நடைபெறாவிட்டால் உங்களோடு சேர்ந்து நானும் வீதியில் இறங்கி போராடுவேன் எனவும் சந்திரிக்கா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இவ் விடயங்களை குறிப்பிட்டு மகிந்த வீதியில் இறங்கி போராடி வருவது குறிப்பிடத்தக்கது.