Breaking News

மறித்தும் நிற்காததால் சுட்டனர். - யாழ்.பொலிஸ் அத்தியட்சகர்



மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிற்குமாறு பொலிஸார் சைகை காட்டியுள்ளனர் ஆயினும் அவர்கள் நிற்கவில்லை. நிற்காது சென்றமையால் வாள்வெட்டுக் குழு என்று நினைத்துப் பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர்கள் நின்றிருந்தால்பொலிஸார் சுட்டிருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்தார் யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்னிஸ்லாஸ்.

மதுபோதையில் காணப்பட்டுள்ளனர். பரிசோதனையிலும் அவ்வாறு கூறப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க பொலிஸார் வீதிகளில் நின்று இரவிரவாக காவலில் ஈடுபடுகிறார்கள் இந்த நிலையில் தேவையில்லாத இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது நிற்குமாறு கூறியபோதும் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

மாணவர்கள் விபத்தில் உயிரிழந்தனர் என்று தான் முதலில் கூறப்பட்டது. விபத்துக்குள்ளானவுடன் அவர்கள் பொலிஸார் வைத்தியசாலையில் சேர்த்தனர் ஒருவர் உயிரிழந்தால் அவரது சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டது. அங்கு சட்ட மருத்துவநிபுணர் , நீதிவான் ஆகியோரே செல்லமுடியும். நாங்கள் சென்றுஎன்ன நடந்தது என்று பார்வையிட முடியாது. பிறகுதான் அங்கு சென்றிருந்தேன். அதன்பின்னரே சுட்டமையால் தான் அவர்கள் கொல்லப்பட்டனர் என்பது தெரியவந்தது.

அவ்வாறு சுடுவதாக இருந்தாலும் முழங்காலுக்கு கீழேதான் சுட முடியும் ஏன் அது மீறப்பட்டது என்பது உள்ளிட்ட விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.