மகிழ்ச்சியில் கோத்தா..!!
காலம் கடந்தேனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மை புரிந்துக் கொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோட்டாபய மற்றும் முன்னாள் கடற்படை உயரதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே கோட்டா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் சிலர் வெளியிட்டு வரும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எமக்கும் இடையே எவ்வித ரகசிய உடன்படிக்கையும் கிடையாது.
ஜனாதிபதி தற்போதே உண்மையான நிலைமைகளை புரிந்து கொண்டுள்ளார். இது சந்தோசம் அளிப்பதுடன், இதேவிதமாக ஜனாதிபதி தொடர்ந்தும் செயற்படுவார் என எதிர்பார்க்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.