Breaking News

இஞ்சி கொடுத்து கொச்சிக்காய் வாங்கிய கதையாகக் கூடாது- கம்மம்பில



லஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்தின் இராஜினாமா, இஞ்சி கொடுத்து கொச்சிக்காய் வாங்கிய கதையாக மாறக் கூடாது என கூட்டு எதிர்க் கட்சியின் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்தார்.

இவ்வாணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் இராஜினாமாவினால் அவ்வாணைக்குழு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பலப்படுவதற்கு காரணமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், தில்ருக்ஷியை அனுப்பிவிட்டு அவ்விடத்துக்கு அர்ஜுனன் மஹேந்திரனை நியமிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதன்போது, அய்யோ ! ஏற்கனவே இருந்த தில்ருக்ஷியே இருந்தால் நல்லது என சொல்ல அரசாங்கம் இடமளிக்கக் கூடாது எனவும் நாம் அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம் எனவும் அவர் கூறினார்.