பசிலின் ரகசிய சதி திட்டம் அம்பலம்! நெருக்கடியில் சிக்கிய மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஷ தற்போது தர்மசங்கடமான சூழ்நிலைக்குள் சிக்கியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்காரணமாக அவர் தற்பொது மௌனம் காக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனவாதத்தை தூண்டிவிடும் செயற்பாட்டில் ஈடுபட்ட மஹிந்த தீவிர அமைதியாகி உள்ளார். இந்நிலையில் தனது செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு சகவாழ்வு குறித்து மஹிந்த கருத்து வெளியிடுகின்றமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கான காரணம் மஹிந்தவின் தம்பியான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்ட பாரிய மோசடி காரணம் என தெரிய வந்துள்ளது.
ஸ்ரீபாதத்தில் உள்ள காணி ஒன்றை சவுதி அரேபிய வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் பசில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விடயம் திட்டமிட்டு மறைக்கப்பட்ட போதும், தற்போது மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக மஹிந்த அமைதியாகி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளளனர்.
குறித்த ஸ்ரீபாத பிரதேசத்தில் பாரிய ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க பசில் ராஜபக்ஷ முயற்சித்த போதும் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இறுதியில் அந்த காணியை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ள முறை தொடர்பில் தற்போது ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மஹிந்தவின் அடுத்த அரசியல் இலக்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும் தன்னை தீவிர பௌத்தனாக காட்டிக் கொள்ளும் மஹிந்த, விகாரைகளுக்கு விஜயம் செய்வதுடன் தேரர்களின் கால்களில் வீழ்ந்து சிங்கள மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறார்.
ஸ்ரீபாத பிரதேசம் தமிழர்களுக்கு சொந்தமானதென வரலாற்று சான்றுகள் உள்ள போதும், அது மூடி மறைக்கப்பட்டு தற்போது சிங்கள மாயமாகியுள்ளது.
தற்போது சிங்களவர்களின் புனித பூமியாக மாறியுள்ள ஸ்ரீபாதவுக்குள், சவுதி வர்த்தகர்களின் பிரசன்னம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்து வரும் மஹிந்தவுக்கு தற்போது பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அதேவேளை புதிய அரசியல் கட்சி அமைக்கும் பசிலின் உண்மை நிலைமை இவ்வாறு வெளியாகியுள்ளமையினால் அவரது அரசியல் பயணத்திற்கு பாரிய பின்னடைவொன்று ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.