மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் ..!! அம்பலப்படுத்துகிறார் சந்திரிகா
கடந்த ஆட்சிக்காலத்தில் தனது சகல தொலைபேசி அழைப்புகளும் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றிருந்தால், முதலில் தன்னையே கொலைசெய்திருப்பார் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஒட்டுமொத்த தமிழர்களையும் மஹிந்த புலிகளாகவே நோக்கியதாக தெரிவித்த சந்திரிகா, சிறுபான்மை மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மக்களது ஆதரவு அற்றுப்போன நிலையில், பொலிஸ் மற்றும் படையினரை கட்டுக்குள் வைத்துக்கொண்டே மஹிந்த பல அட்டூழியங்களை செய்து வந்ததாக சந்திரிகா மேலும் தெரிவித்துள்ளார்.