Breaking News

நல்லாட்சி அரசால்- “பிரபாகரன் படை“ என்ற பெயரில் துண்டுப்பிரசுரம்


யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திலுள்ள
அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோஸ்தர்களை உடனடியாக இடமாற்றம் பெற்று வெளி மாவட்டங்களுக்கு செல்லுமாறு ”பிரபாகரன் படை” என்ற பெயரில் நல்லாட்சி அரசின் புலலாய்வுப்பிரிவால் இன்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க ப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண நகரின் பல இடங்களிலும் போடப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வட மாகாணத்தை விட்டு வெளியேற 21 நாள் கால அவகாசமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ”ஆவா கெங்ஸ்டர்” என்று அழைக்கப்படும் வாள் வெட்டுக் கும்பல் உட்பட யாழ் குடாநாட்டில் செயற்பட்டுவரும் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் அனைவரினதும் கவனம் திரும்பியுள்ள நிலையில், யாழ் குடாநாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதுடன் யாழ்ப்பாணத்தில் ஒரு அச்சநிலையை தொடர்ந்தும் பேணுவதோடு இராணுவ,பொலீசாரின் பிடியில் வடக்கை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கே நல்லாட்சி அரசு செயற்படுவதாக தெரியவருகின்றது.

வரப்போகும் மாவீரர்நாள் மற்றும் மாணவர் படுகொலையின் எதிரொலி ஆகியவற்றை கருத்தில்கொண்டே இராணுவப்புல(ன)நாய்வுப்பிரிவினர் களத்தில் இயங்கியுள்ளதாக தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

துண்டுப்பிரசுரங்களில் பௌத்த மயமாக்கல்,போதைப்பொருள் பாவனை என்பவற்றை சுட்டிக்காட்டுவதன் ஊடாக அது தமிழ்த் தரப்பிலிருந்து வெளியிடப்படுவதான ஒரு மாயத்தோற்றத்தையும்  உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள் என்றும் தமிழர்கள் வாழும் பூவீகப் பிரதேசமான வடமாகாணத்தின் மண்ணும் எமது கலசாரமும் தனித்துவமானவை என்றும், அவை இன்று சிங்கள காடையர்களால் சூறையாடப்பட்டு வருகின்றன என்றும் ” பிரபாகரன் படை” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடுவதன் ஊடாக சாதாரண பொதுமக்களை அச்சமடைய வைக்கலாம் என்றும் நல்லாட்சி அரசு எண்ணுகின்றது.

தமிழ் இளைஞர் சமுதாயம் சாராயம் மற்றும் போதைவஸ்துக்கு அடிமையாகி சீரழிந்து வருவதாகவும். இவை சிங்கள அரசால் மேற்காள்ளப்பட்டுவரும் ஒரு திட்டமிட்ட செயலாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

புத்தர் சிலைகள அமைப்பதும் சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதும் எம் இனத்தை சினங் கொள்ள வைக்கும் செயலாக பார்க்கப்படுவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் 10 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் சிங்கள பெரும் பிரதேசமாக மாற்றம் கண்டுவிடுமளவிற்கு சிங்களவாதிகளின் போக்குகள் மிகக்கடுமையாகவும், கீழ்தரமாகவும் இருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. 






முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்