Breaking News

மஹிந்தவின் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட சம்பந்தன் : வெடித்தது எதிர்ப்புகள்!



நல்லாட்சி என கூறிக்கொள்ளும் தேசிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எதிர்கட்சிக் தலைவரே இரா.சம்பந்தன் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், இரா.சம்பந்தனின் உதவியாளர்களாக மக்கள் விடுதலை முன்னணியினர் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு தரப்பினர் கூறியுள்ளனர்.

இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. அனைவரும் அரசாங்கத்தின் கை பொம்மைகளாக இருக்கின்றனர்.

அரசாங்கத்தை எதிர்கக்கூடிய 51 பேரும் எம்முடன் இருக்கின்றனர். இந்நிலையில், அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு பாராளுமன்றத்தில் எதிர்கட்சி இல்லை.

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எதிர்கட்சி தலைவர். அவரின் உதவியாளர்களாக மக்கள் விடுதலை முன்னணியினர் இருப்பதாக அவர் கூறியுள்ளனர்.

இதேவேளை, சபாநாயகரின் கணக்குப்படி, சம்பந்தன் மற்றும் அனுரகுமார திசாநாயக்க உட்பட 23 பேர் எதிர்கட்சி ஆசனத்தில் உள்ளனர்.

எவ்வாறாயினும், 51 பேரை விட 23 பேர் தான் அதிகம் என்ற கணக்கை கொண்ட உலகில் உள்ள ஒரே ஒரு சபாநாயகர் இலங்கையிலேயே உள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.