Breaking News

சர்ச்சைக்கு மத்தியில் இன்று கைச்சாத்தாகிறது கூட்டு ஒப்பந்தம்



கடந்த ஒன்றரை வருடங்களாக இழுபறி நிலையில் காணப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இன்றைய தினம் கைச்சாத்திடப்படவுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இந்தக் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவிருந்த நிலையில் காலாவதியாகியிருந்தது.

இந்த நிலையில் தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இன்று கொழும்பில் வைத்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டபடி 730 நாட்சம்பளம் என்ற அடிப்படையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிஸின் தலைவரும், நாடாமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நாட்சம்பளமாக 730 ரூபா வழங்கப்படும் தீர்மானத்தை எதிர்த்து தோட்டத் தொழிலாளர்கள் மலையகம் எங்கிலும் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை 21 நாட்களாக முன்னெடுத்துவந்தனர்.

தோட்டத் தொழிலாளர்களது போராட்டங்களுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.



இவ்வாறான நிலையிலேயே கூட்டு ஒப்பந்தம் 730 ரூபா நாட்சம்பளம் என்ற அடிப்படையில் இன்று கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.