Breaking News

ஆட்சியை கவிழ்க்க சர்வதேசத்தின் உதவியை நாடுகிறது மஹிந்த அணி!



சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொண்டே கடந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அதே தந்திரோபாயத்தை பின்பற்றி சர்வதேசத்தின் உதவியுடன் ஆட்சியை கவிழ்ப்போம் என சூளுரைத்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் ஊடவியலாளர்களை சந்தித்த பஷில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதுவரை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்துள்ள பஷில், தேவை ஏற்படும் பட்சத்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு சர்வதேசத்தின் உதவியுடன் சிவில் அமைப்புகளையும் புதிய கட்சியையும் உருவாக்குவோம் என் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு உருவாக்கும் கட்சியானது, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து களமிறங்குமென பஷில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி தேர்தல் நடத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கம் கூறிவரும் எல்லை மீள்நிர்ணய பிரச்சினையொன்றும் பாரிய பிரச்சினையல்ல என்றும் பஷில் கூறியுள்ளார்.