நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு, இன்று முதல் மின்வெட்டு
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளதனால், இன்று (17) முதல் மின் வெட்டு இடம்பெற வாய்ப்புள்ளதாக மின் சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
மின் வெட்டு பற்றிய நேர அட்டவணை பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் இரவு நேரங்களிலேயே இந்த மின்வெட்டு இடம்பெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிலையத்தின் கருவிகள் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றைச் சீர் செய்யும் வரையில் மின் வெட்டு அமுல்படுத்த வேண்டி வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த மின் உற்பத்தி நிலைய செயலிழப்பினால் 900 மெகாவோட் மின்சார உற்பத்தி தேசிய கட்டமைப்புக்கு கிடைக்காமல் போவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்