Breaking News

கோட்டாவை காப்பாற்ற முனைந்தால் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கும்: மாவை

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமே தவிர, அதனை விடுத்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் கடற்படை தளபதிகள் மற்றும் இராணுவத்தினரை காப்பாற்றும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை வன்மையாக கண்டிக்குமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


கோட்டா மற்றும் முன்னாள் இராணுவ தளபதிகளை விசாரணைக்கு அழைத்திருந்தமை தொடர்பில் தாம் கடும் அதிருப்தியை வெளியிடுவதாக, அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்தபோதே, மாவை மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.

பாரிய ஊழலில் ஈடுபட்டவர்களையும் குற்றமிழைத்தவர்களையும் பாதுகாப்பதற்காக மக்கள் வாக்களிக்கவில்லையென குறிப்பிட்ட மாவை, ஜனாதிபதி எதற்காக அவ்வாறானதொரு கருத்தை தெரிவித்தார் என்பதை தெரிந்துகொள்வது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கடந்த ஆட்சியில் இம்பெற்ற விடயங்களுக்கு நீதி கிடைப்பமோடு நடந்தமை மீண்டும் நடக்காமல் இருக்கவே தமிழ் மக்கள் உள்ளிட்டோர் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்தனர். இந்நிலையில், மக்களின் நம்பிக்கையை வீணடிக்கும் வகையில் ஜனாதிபதி செயற்படக் கூடாதென மாவை சேனாதிராஜா வலியுறுத்திக் கூறியுள்ளார்.