Breaking News

மலையக தமிழினத்திற்கு சர்வதேச சமூகம் கைக்கொடுக்க வேண்டும்: மனோ



மலையக தமிழ் இனத்தின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கு கைக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்.

இது குறித்து ஐ.நா. சபை வலியுறுத்த வேண்டும் என இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியாவிடம் கோரவுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இளைஞர் இணைய வாராந்த கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அமைச்சர், ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியாவை, தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளனர்.

இதன்போது, மலையக தமிழ் இனத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவான தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பிலும், பின் தங்கிய பிரிவினர் என்ற முறையில் அவர்களை கைதூக்கிவிட வேண்டிய விசேட ஒதுக்கீடுகளை வழங்க ஐநா சபை சர்வதேச சமூகத்தையும், இலங்கை அரசையும் வலியுறுத்த வேண்டியதன் அவசியம் பற்றி பேசுவோம்.

அரசுக்குள் இருந்து நாமும், வெளியில் இருந்து ஐ.நா.வும் வலியுறுத்தும் போதுதான் இங்கே காரியம் நடக்கும் என்பது எவரையும் விட எனக்கு நன்றாக தெரியும் என்றும் குறிப்பிட்டார்.