Breaking News

நுரைச்சோலை மின்நிலையத்தின் மின் விநியோகத்திற்கு பாதிப்பு



அனுராதபுரம் ட்ரான்ஸ்மிசன் லைனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நுரைச்சோலை மின்நிலையத்தின் மின் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சில பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்களுக்குள் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என, இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது

மின் உற்பத்தி நிலையத்தின் 3 பிரதான மின் உற்பத்தி இயந்திரங்களும் செயல் இழந்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயல் இழந்துள்ளதால் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.