Breaking News

ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் ஐயோ

தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஐயோ என்ற சொல், ஒக்ஸ்போட் ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ளது. ஒக்போர்ட் ஆங்கில அகராதியின் பிந்திய பதிப்பில், ஐயோ (Aiyo) என்ற சொல் உள்ளடக்கப்பட்டு அதற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.


தென்னிந்தியாவிலும் சிறிலங்காவிலும் துன்பத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்த இந்த சொல் பயன்படுத்தப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஐயோ என்ற சொல்லுக்கு, ஒக்போர்ட் அகராதியில், “In southern India and Sri Lanka, expressing distress, regret, or grief; ‘Oh no!’, ‘Oh dear!’.” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.