வட மாகாண சபையின் அடுத்த உப தலைவர் யார்?
வட மாகாண சபையின் உப தலைவரை நியமிக்கும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே வருவதாக, சபையின் உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வட மாகாண சபையின் உப தலைவராக இருந்த அன்டனி ஜெகநாதன் அண்மையில் காலமானதை அடுத்து இதுவரை அந்தப் பதவிக்கு பிறிதொருவர் நியமிக்கப்படவில்லை என, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மாநாட்டில் உப தலைவருக்கான பிரதிநிதியின் பெயர் முன்மொழியப்பட வேண்டும், எனினும் கூட்டமைப்பின் சந்திப்பு இதுவரை இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.