Breaking News

மூனை சந்தித்த சம்பந்தன் காத்திருந்த மக்களை சந்திக்கவில்லை(படங்கள்)




யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டதுடன் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.


இவர்களின் சந்திப்பு இடம்பெற்றவேளை மூனை சந்திப்பதற்காக பாதிக்கப்பட்ட பெருமளவான தமிழ்மக்கள் நூலக வாயிலில் காத்திருந்தபோதும் தமிழ்த் தலைமைகள் அவர்களை சந்திப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்றும். 

அதன்போது கடும் வெய்யிலின் மத்தியில் மக்கள் ஆத்திரத்தில் இருந்ததாகவும் ஆனால் தமிழத் தலைமைகள் மக்களை சந்திப்பதை தவிர்த்து கொண்டதாகவும் மக்கள் கூட்டமைப்பினரை கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்ததாகவும் அங்கிருக்கும் தமிழ் கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்புடைய முன்னைய செய்தி

மூன் கூட்டமைப்பு சந்திப்பு - வெளியே மக்கள் கூட்டம்(படங்கள்)

முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்