Breaking News

தமிழர்களுக்கு பயந்து பின்வாசல் வழியாக நுழைந்தார் மூன்...!!



யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்திற்கு வந்தடைந்துள்ளார்.

1.40 மணியளவில் ஆளுநரின் அலுவலகத்திற்கு பான் கீ மூன் சம்பிரதாயபூர்வ வரவேற்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகிறது.

இதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு பாதுகாப்பு வழங்கும் நிமித்தம் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

மக்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களை தவிர்த்துக் கொள்வதற்காக ஐ. நா செயலாளர் வட மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ வாயிலைத் தவிர்த்து பின்வாசல் வழியாக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தாகும்.

மேலும் ஐ. நா செயலாளரிடம் கையளிக்க இருந்த மகஜர் அவரின் உயர் அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.