அன்ஸார் தாக்கப்பட்டமை குறித்து இன்று வெளிவிவகார அமைச்சில் விசாரணை
மலேசியாவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இப்றாஹீம் அன்ஸார் மீது நேற்று (04) மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரதி அமைச்சர் ஹர்ஷ த சில்வா சம்பவம் தொடர்பில் காரணங்களைக் கேட்டறிவதற்கு இலங்கையிலுள்ள மலேசியாவுக்கான உயர் ஸ்தானிகரை இன்று (05) வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்பொழுது மலேசியாவுக்கான விஜயத்தில் காணப்படுகின்றார். இவருக்குத் தேவையான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ளதாக அவருடன் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜோன்ஸ்டன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.