Breaking News

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் விபத்து : இரண்டு பிள்ளைகளின் தாய் பலி



முல்லைத்தீவு மாந்தைகிழக்கு வன்னிவிளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டுபிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 வயதுடைய அவரது மகன் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நிறுத்தி வைக்கப்பட்ட டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தாயான அம்பாள்புரம் வன்னிவிளாங்குளத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரவிக்குமார் இன்பமலர் என்ற பெண் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த 14 வயதுடைய மகன் இரவிக்குமார் கீதன் படுகாமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.