எழுக தமிழ் பேரணியால் கூட்டமைப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – சி.வி.கே.
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணியினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், எழுக தமிழ் பேரணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை.
நாம் எதனைக் கோருகிறோமோ அதனைத் தான் அவர்களும் கோருகிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றதால், கூட்டமைப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.