Breaking News

ராம்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார் தந்தையார்(காணொளி)

மீனாட்சிபுரத்தில் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட
ராம்குமார் புழல் சிறையில் ஒரு மாலைபொழுதில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் சொல்கிறது.

வழமைபோலவே தமிழகத்தில் ஒவ்வொரு சிக்கல்களும் மக்கள் போராட்டங்கள் வீச்சாக இடம்பெறுகின்ற வேளைகளில் அதனை திசை திருப்புவதற்காக நடைபெற்றுவரும் ஒரு திசைதிருப்பு நடகமாகவே இதனை ஊடகப்பரப்பில் நோக்கப்படுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தமிழ்க்கிங்டொத்திற்கு தெரிவிக்கின்றன.

காவிரி நீர்ப் பிரச்சனையை திசைதிருப்பும் நோக்கில் நடைபெறும் திட்டமிட்ட நாடகம் என அறியப்படுவதாகவும் இது தற்கொலையல்ல திட்டமிட்ட கொலையே எனவும் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ராம்குமாரின் தந்தையார் இவர் தற்கொலைசெய்யவில்லை என்றும் இது பொலீசாரே படுகொலை செய்துள்ளதாக உறுதிபட தெரிவித்துள்ளதோடு சீ.பி.ஐ விசாரணை இன்றி உடலை பொறுப்பேற்கப்போவதில்லை என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.





இந்த 80 நாளில் ராம்குமார் வழக்கில் என்ன நடந்தது?.

ஜூன் 24 ஆம் தேதி, மென்பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6. 40 மணியளவில் அடையாளம் தெரியாத ஒரு நபரால் கொலை செய்யப்பட்டார். சென்னையில், அதுவும் மக்கள் அதிகம் கூடும் ஒரு பகுதியில் நிகழ்ந்த இந்த கொலை, தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஜூன் 27 ஆம் தேதி, இந்த கொலை வழக்கு, ரயில்வே காவல்துறையிடமிருந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதே நாளில், ஒரு சிசிடிவி வீடியோவை, காவல்துறை வெளியிட்டது.



ஜூலை 1, திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (22) என்ற இளைஞனை, சுவாதி வழக்கு தொடர்பாக காவலர்கள் கைது செய்தனர். அப்போது, தற்கொலை செய்து கொள்வதற்காக ராம்குமார் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்றதாக போலீஸார் கூறினர். உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஜூலை 4, அதிகாலை 3 மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் ராம்குமார் சென்னைக்கு 108 ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டார். அதே நாளில் எழும்பூர் பெருநகர மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால், ராம்குமார் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜூலை 5, மாலை 4 மணி அளவில் ராம்குமார் ராயப்பேட்டை மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

ஜூலை 6, ஜாமீன் வேண்டி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமாரின் வழக்கறிஞர் பதிந்த ஜாமீன் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜுலை 12, காலை 10. 30 மணி அளவில் நடந்த அடையாள அணிவகுப்பில், சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், ராம்குமாரை அடையாளம் காட்டினார்.

ஜூலை 13, ராம்குமாரை மூன்று நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க மாஜிஸ்ட்ரேட் அனுமதி தந்தார். புதன்கிழமை மாலை நீதிமன்ற காவலில் இருந்து போலீஸ் காவலுக்கு சென்றார்.



முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்