வடக்கில் இனவாத குழுக்களின் குரல் மேலோங்கியுள்ளது - அனுரகுமார திஸாநாயக்க
வடக்கில் சாதாரண மக்களின் குரல்களுக்கு பதிலாக சிறிய இனவாத குழுக்களின் குரல் மேலோங்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நாட்டின் எதிர்காலமும் இடதுசாரிகளின் கடமையும் என்ற பகிரங்க கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய அனுரகுமார திஸாநாயக்க, சி.வி.விக்னேஸ்வரன் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் கவலை அடைவதாக கூறியுள்ளார்