உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளை புகைப்படம் எடுத்த பொலிஸார்! அச்சத்தில் பெற்றோர்
யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நேற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரும், புலனாய்வாளர்களும் மாணவிகளை புகைப்படம் எடுத்துள்ளமை தொடர்பில் பெற்றோர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையின் முன்னாள் அதிபரின் பதவி காலத்தை தொடர்ந்தும் நீடிக்க கோரி கடந்த ஒரு வாரமாக பாடசாலை மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மாணவர்களுடன் மல்லாகம் நீதிபதி யூட்சன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்தே மாணவிகளின் போராட்டத்திற்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது.
எனினும் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும், புலனாய்வாளர்களும் மாணவிகளை புகைப்படம் எடுத்துள்ளனர். பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பெற்றோரின் இந்த எதிர்ப்பையும் மீறி பொலிசார் பாடசாலை மாணவிகளை பின்தொடர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த சம்பவங்கள் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.