துப்பாக்கிகளை வழங்கிய வடமாகாண சபை உறுப்பினர்
விவசாய நடவடிக்கையை பாதிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில், வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், முல்லலைத்தீவு மாவட்டத்தின் 18 கமக்கார அமைப்புக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி வைத்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய 18 துப்பாக்கிகளை 18 கமக்கார அமைப்புக்களிடம் நேற்று (புதன்கிழமை) முள்ளியவளை கமநலசேவை நிலையத்தில் வைத்து வழங்கிவைத்தார்.
குரங்குகளின் தாக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து வருவதாகவும், இவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தன.
இக்கட்டான ஒரு நிலையில் இவ்வாறு துப்பாக்கிகளை வழங்கி வைத்தமைக்காக விவசாயிகள் வடமாகாண சபை உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.