Breaking News

நல்லாட்சியில் இராணுவத்தால் அமைக்கப்படும் வீடுகள்(புகைப்படங்கள்)


வலிகாமம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பாது இராணுவத்தால் இனங்காணப்பட்ட பகுதிகளில் அவர்களுக்கு நேரடியாக இராணுவத்தாலேயே வீடுகள் அமைக்கப்பட்டு அவர்களை குடியேற்றும் திட்டம் பற்றிய செய்தி  அறியக்கிடைத்துள்ளது.

அண்மையில் வலிவடக்கு மக்களுக்கு 250 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என அதற்கான பத்திரங்களும் அரச அதிபரும் இராணுவமும் கலந்துகொண்ட கூட்டமொன்றில் சில மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக மயிலிட்டிப்பகுதியில் 40வீடுகள் வரை முற்றுமுழுதாக இராணுவத்தாலேயே அமைக்கப்பட்டுவருகின்றமை தமிழ்க்கிங்டொத்தின் செய்தியாளருக்கு புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவேண்டும் என வலியுறுத்திவரும் நிலையில் அவர்களில் ஒருதொகுதியினரை இவ்வாறு கட்டாயப்படுத்தி இராணுவம் கட்டும் வீடுகளில் குடியேற்றுவதன் மூலம் இதுவரை போராடிவந்த மக்களின் குரல்கள் ஓய்ந்துவிடும் என அரசு கருதுவதாக அறிய வருகின்றது. 



அவர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதாகட்டும் அவர்களை சொந்த இடங்களில் குடியேற்றுவதாகட்டும் அதனை அரச அதிகாரிகளோ தொண்டு நிறுவனங்களே செய்ய வேண்டும் ஆனால் வடகிழக்கில் மாத்திரம் இராணுவத்தினர் சிவில் நிர்வாக வேலைகளில் ஈடுபட்டுவருகின்றார்கள் என்பதற்கு இது இன்னுமொரு சான்றாகும்.