Breaking News

பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர கொலை வழக்கு: இறுதித் தீர்ப்பு இன்று



பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று (08) வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான வழக்கின் சாட்சிகள் பல வருட காலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இதன் இறுதித் தீர்ப்பே இன்று வழங்கப்படவுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 பேருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. இச்சம்பவம் கடந்த 2011 ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் தினத்தன்று இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.