மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது - யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில், 65 வயது வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விடயத்தில் அவரது கணவர் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கேணியடி லேன் - திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகனநாதன் செல்லம்மா (வயது 65) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கணவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் இந்த நிலையிலேயே மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. சம்பவத்தினை அறிந்த பொலிஸார் ஸ்தலத்திற்குச் சென்று, யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதிக்கு தகவல் வழங்கினர்.
பின்னர், நீதிபதி சடலத்தினை பார்வையிட்டதுடன், யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை, சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நபர், நீதிபதி உத்தரவுக்கு அமைய, தெல்லிப்பளை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் கொலை இடம்பெற்ற வேளை, அச்சத்தில், அவர்கள் பக்கத்து வீட்டிற்கு ஓடிச் சென்றுவிட்டதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.