Breaking News

இலங்கை அரசுக்கு சவால் விடுக்கும் வட மாகாண சபை உறுப்பினர்!



தேசிய தலைவரின் வழிகாட்டலில் ஒரு பாரிய போரை நடத்திய போது, இறுதி நேரத்தில் உலக நாடுகள் சில ஒன்றிணைந்து எமது விடுதலைப்போராட்டத்தை தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில் தற்போது சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் வடக்கு பகுதிகளில் வாழ்ந்து வருவதாக வட மாகாண சபை உறுப்பினர் பசுபதி தெரிவித்துள்ளார்.

தமிழின விடுதலைக்காக பாடுபட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வை கட்டியெழுப்ப வேண்டிய தேவை தாம் உள்ளிட்டவர்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, இது உண்மையான நல்லாட்சி அரசாங்கம் என்றால் வட மாகாணத்துக்கு முழுமையான அதிகாரத்தை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுத்தினர் வெளியேற வேண்டும். மக்களது காணிகள் மீண்டும் அவர்களிடம் கையளிக்க வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் மட்டுமே இது நல்லாட்சி அரசாங்கம்.

இதேவேளை, புலம் பெயர் தமிழ் மக்கள் வட மாகாணத்துக்கு நேரடியாக பணத்தை வழங்க கூடிய ஒரு சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்தால் 24 மணி நேரத்துக்குள் முன்னாள் போராளிகளது வாழ்வை மாற்றி காட்ட முடியும்.

எனினும், இலங்கை அரசாங்கம் அவ்வாறான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.