அரசாங்கத்தின் 7 அமைச்சர்களுக்கு ஆபத்து!
சமகால நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிகும் 15க்கும் அதிகமான அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களிடம், நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணை மேற்கொண்டுள்ளது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 15 பேரில் 7 பேர் கைது செய்யப்படும் ஆபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அமைச்சர்கள் பல வாரங்கள் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்படவுள்ள அமைச்சர்கள் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக பணம் சம்பாதித்துள்ளதாகவும், அந்த பணம் சம்பாதித்த முறையினை வெளிப்படுத்த அவர்கள் தவறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நூற்றுக்கு 95 வீதம் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.