Breaking News

திலீபனின் நினைவுதினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு



விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட அரசியல் துறை பொறுப்பாளர் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வை, ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

குறித்த நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வேந்தன், செயலாளர் இ.கதிர், பொருளாளர் செ.விதுரன், ஊடக பேச்சாளர் க.துளசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் திரு உருவ படத்திற்கு, இதன்போது ஆனந்தசங்கரி மற்றும் வேந்தன் ஆகியோர் விளக்கேற்றி மலர்வணக்கம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.