Breaking News

ஒபாமா குறித்து ரொட்ரிகோ டுடெர்டோவின் தகாத வார்த்தை பயன்பாட்டால் சர்ச்சை



அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்து தகாத சொல் ஒன்றை பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ பயன்படுத்தியுள்ளதால், அவருடனான சந்திப்பை ஒபாமா ரத்து செய்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் போதை பொருள் தொடர்பாக நீதிக்குப் புறம்பான கொலைகள் நடப்பது குறித்த பிரச்சினையை தான் எழுப்ப உள்ளதாக அமெரிக்க அதிபர் கூறியதை தொடர்ந்து, ரொட்ரிகோ டுடெர்டோ பதிலளித்த போது, அவர் ஒபாமா குறித்து தவறான சொல்லை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

தனது விமர்சனம் ஒரு தனிப்பட்ட தாக்குதலாக மாறியுள்ளது குறித்து தான் வருந்துவதாக ரொட்ரிகோ டுடெர்டோ தெரிவித்துள்ளார்.

லாவோஸில், இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கவுள்ள தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள கூடியுள்ள தலைவர்களில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ ஆகிய இரு தலைவர்களும் அடங்குவர்.