Breaking News

அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் உடற்பயிற்சியில் ஈடுபடும் மஹிந்த!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மலேசியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் மஹிந்தவின் வருகைக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை பலப்படுத்த அந்த நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான பரபரப்பான சூழ்நிலையிலும், மஹிந்த ராஜபக்ச காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மலேசியாவிலுள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் மஹிந்த பயிற்சியில் ஈடுபடும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.